சுக்கிரன் தரும் யோக பலன்

சுகபோகம் தரும்
  பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.  ஒருவருக்கு  பொன்,  பொருள்,   அழகமைந்த   மனைவி,   சுகமான   வாழ்க்கை,  உயர் பதவி,  கலை,   வாகன்   யோகம்   போன்றவைகளை   சிறப்புடன்   வாழும் யோகத்தை தருவது சுக்ரன் ஆகும்.

அசுர குரு   சுக்ரன்  ஆவார்.  இவர்   இகலோக   ஆசையை   அளிப்பவர்.   சுக்ரன்   விடி  வெள்ளி  பிரகாஷமாக   தெரியும்  - இளமையாக   இருப்பவர்கள்   ஜொலிப்பார்கள்  ஆக   இளமையும்,  ரசனையையும்  அளிப்பவர்.  ஆடல்  பாடல்   முதலான   நளின   கலைகளுக்கு   நாயகன்,  மனைவியைக்   கொடுத்து    மகிழ்ச்சிகாரமான    இல்லற   வாழ்க்கையைத்  துவக்கி   வைத்துப்   பரிபாலனம்  செய்வர்.

சுக்ரன் தொழில்
வேஷக்காரன்,   நடிகர்கள்,    கலைத்துறைக்காரன்கன்,  ஒப்பனைப் பொருட்கள்,  அலங்கார   வஸ்த்துக்கள்,  ஆடம்பர  வஸ்துகள்,  சுக்ரன்  என்றால்    வெள்ளை   என்று  பொருள்,  வெண்மை   பொருள்கள்   அனைத்துக்கும்   காரகன்,    சுக்கில  பட்சம் ,  வைரம்   மிக    பிரகாஷம்  ஜொலிப்பது  போல்  எல்லாம்   சுக்கிரன் ,  இளம் பெண்   குறிப்பது  சுக்ரன், விடியற்  காலை   பொழுத்தைக்  குறிப்பவர்   இவர்,   வான்   மண்டலத்தில்   விடியல்   காலை  பொழுதில்   சுக்ரன்   தெரிகிறார்.   அதிகாலையில்   மனிதனுக்கு  காமக் கிளர்ச்சியை   ஏற்படுத்துவதும்   இவர்  தான்.  காமத்துக்   காரன்   சுக்ரன்.

களத்திரகாரகன் சுக்ரன்
சுக்ரன்    இல்லற்   வாழ்வுக்குறியவர்,  சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு   மனைவியைப்பற்றியும்,  பெண்ணுக்கு  மண   வாழ்க்கையைப்  பற்றியும்  சொல்லுகின்றவர்.   உலக   வாழ்கையில்     இன்பமும்  செளபாக்கியங்களையும்   சுக  போக    செளரியங்களையும்  தருபவன்  சுக்ரன்.   வாகன  வசதிகளை       அளிப்பவர்   இவர்,  மிக  உயர்ந்த    வாகனமா,  நடுத்தரமான   வாகனமா,  கடைசி   நிலை    வாகனமா,  ஒன்றுக்கு   மேற்பட்ட   வாகனமா  என   குறிப்பவர்   இவர்தான்.

ஒருவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்யக்  கூடியவர்  இவர்.
கையில்   காசுடையவர்களாய்   வைப்பரும்,   சொந்த  வீடு அளிப்பவரும்  இவர்தான்,  கலை  உலகில்   சிறப்பான   நிலையை  அளிப்பவர்.  பெண்களிடம்  மோகத்தை  அளிப்பவரும்,  வாழ்நாள்   முழுவதும்   அதே  நினைப்பில்   இருக்க  வைப்பவர்  இவர்தான்.

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் யோக பலன்கள்
வலுப்  பெற்ற  சுக்ரன்  (சுக்ரன் ஆட்சி, சுக்ரன் உச்சம்) கலாரசனை என்கின்ற   அற்புத  உணர்வு அளிப்பவர்,  அழகு,  அழகின்   படைப்பான  ஆரணங்கு,  அந்த    ஆரணங்கத்தின்  மீது  காதல்   கொண்டு   சுகமடையும்   தகுதி, சிற்றின்பம்,    திருமணம்  முதலான  ஆணுக்கு  அளிப்பவர்.  அதே  போல்  பெண்களுக்கு   நளினத்   தன்மையையும்   அழகான  தோற்றம்,  கவர்ச்சி,   வீரியசக்தி,  அறிவாற்றல்,   மனத்துக்கிசைந்த   கணவனை   அடையும்   தகுதியையும்,  சுக  போகங்களில்   திளைத்து   மகிழும்  ஆற்றலையும்  வழங்குவார்.  மாட   மாளிகையில்     வாழ்க்கை   நடத்தும்  பாக்கியத்தை  இரு  பாலருக்கும்  அளிப்பவர். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில்  மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால்  எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம். ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும்.

கார் - பங்களா நிலம், பூமி ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். ஆனால், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் அடுக்குமாடிகள் சொகுசு பங்களாக்கள், தோட்ட வீடுகள்  போன்ற நவீன கட்டிடங்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால்தான் இதைப் போன்ற வசதியான யோகம் கிடைக்கும். அதேபோல், சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.


சுகங்களைத் தரும் சுக்ரன்
சுக்ரன்  என்றால்   இன்பம்   என்று பொருள்  கொள்ளலாம்.   அன்பு,  பாசம்,  காதல்  ஆகிய   மூன்று   இன்பங்களை  அளிக்கக்  கூடியவர்.   இன்பம் என்கிற   ஆனந்தத்தை  அடைவதற்குரிய    மனநிலையை   உருவாக்குகிறவர்  சுக்ரன்.   இவர் கலை   உணர்வால்  இன்பம்  உண்டாக்குவார்.    அழகு,  ஆராதனையால்   இன்பம்   ஏற்படுத்துவார்.
                       
கலையம்சமுள்ள    பொருட்  சேர்க்கையால்  இன்பம்  தருவார்.  அழகு    வனிதையால்   ஆடவருக்கு  சுகம் ,வாசனைத்    திரவியங்களால்    உற்சாகம்   ஊட்டுவார்.    இசையால்,   இசையுணர்வால்     இன்பம்  தருவார்,  கற்பனை   வளத்தால்   மாபெரும்  இன்பம்   தருவார்

வாசனை  திரவியங்களால்  சுகானுபவம்    அளிப்பவார்.   கவியின்பம்  தருவார்.   காவிய  இன்பம்   தருவார்.    கற்பனை   வளத்தால்  மா பெரும்   இன்பம்   தருவார்.   நடன   நாகரீக   மணிகளை   உருவாக்குவார்.   நாடகக்  கலைஞர்களைத்   தோற்றுவிப்பார்.  வெண்  திரைச்   சலனப்படத்திற்கு   ஆதாரம்  அவர்.  கண்களைப்   பிரதிபலிப்பவர்,  ஜனன    உறுப்புகளைக்   காப்போன்.

மேலே   குறிப்பிட்ட   இன்பத்தை   யாருக்கு   தருவார்  என்றால்   மீனத்தில்   சுக்கிரன்  உச்சம்  பெற்று   இருக்க,   அவருக்கு   நட்பு   கிரகங்களின்    தொடர்பும்,  பகை   கிரக  தொடர்பு   இன்றி   இருத்தால் கண்டிப்பாக   கிடைக்கும்.  அதே  போல்    சுக்ரன்  ஆட்சி   வீடான    ரிஷபம்  மற்றும்   துலாமில்   இருந்தாலும்   சுக   வாழ்வு  உண்டு.    [சுக்ரனுக்கு   புதன்   நட்பு     கிரகம்.   புதனின்   வீடான  கன்னியில்   சுக்ரன்    நீசம்  அடைகிறார்.  அங்கு   நீச   பங்கம்  பெறாமல்    இருந்தால்  சுக   வாழ்வு   எதிர்பார்க்க   முடியாது...

ஜோதிடத்தில் சுக்ரன் தரும் யோக பலன்கள்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல் இருந்தால்
நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

சுக்கிரன் 6ல் இருந்தால்
உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

 சுக்கிரன் 7ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.


சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.


சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

சுக்கிரன் 11ல் இருந்தால்
நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.



ஜாதகத்தில் சுக்ரன் நிலையும் காமக் கலையும்

துலாம் லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும்.

இங்கிருக்கும் சுக்கிரன் சனியும்சேர்ந்து , உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண் பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். சனியும் பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் கடின உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், கருணையற்ற முடிவுகளை எடுப்பவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார். அதேநேரம் சனி வக்ரம் அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய யோகம் கிடைக்கும்.லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப்பெறும் என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.வலுவுடன் இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக இருப்பார். திறந்தமனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக்குணம் ஆகியவை ஜாதகரிடம் நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார். உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால் விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மேலான நிலைக்குச் செல்ல முடியும்.

விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார். சுக்கிரன் இங்கிருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார்.

ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்.
இந்த லக்னத்திற்கு சுக்கிரன் பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன சயன போகஸ்தானத்திற்க்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை தான்.விருச்சிக லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன் பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். மேலும் ரிஷபம் சுக்கிரனின் பெண்ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். விருச்சிக லக்னத்தவர்களுக்கு சுக்கிரனின் காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவைகளை சுக்கிரன் செய்வது கடினம். தனது தசையில் அவர் பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேசவாசம், பெண்களால் செலவு, முறை தவறிய போகம் ஆகிய பலன்களையே செய்வார்.சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.

தனுசு லக்னத்திற்கு நான்காம் இடமாகிய மீனத்தில் சுக்ரன் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார்.  தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர். ஒரு சூட்சும நிலையாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் அவரது காரகத்துவங்களை வலிமையாகச் செய்ய வேண்டுமெனில் சுக்கிரனை விட லக்னாதிபதி குருபகவான் வலிமை பெற்றிருக்க வேண்டும் ஏனெனில் நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக உருவகப் படுத்தப்பட்ட கிரகங்களின் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு எதிரிக் கிரகங்கள் லக்னாதிபதியை விட வலுப்பெற்றால் யோகத்தை அனுபவிக்க முடியாது.

லக்னாதிபதி குரு வலுப்பெறும் நிலையில் இந்த லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறும் சுக்கிரன் தனது தசையில் அவரது நல்ல காரகத்துவங்களைச் செய்வார். ஆயினும் இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதிரியின் லக்னங்களுக்கு கிரகங்கள் முழுமையான யோகம் தராது. நிச்சயமாக மனைவி தாம்பத்திய சுகம் காமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு குறையை சுக்கிரன் செய்தே தீருவார்.


இங்கு இருக்கும் சுக்கிரன் மிகச்சிறந்த வசதியான ஆடம்பரமான வாழ்வை ஜாதகருக்கு தருவார். நல்ல வீடு அமையும். உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் மிகச்சிறந்த லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார்.


சில நிலைகளில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலையை சுக்கிரன் உண்டு பண்ணுவார்

 இங்கிருந்து அவர் பத்தாம் இடத்தை பார்வையிடுவார் என்பதாலும் மீனம் குருவின் வீடு என்பதாலும் ஜாதகரை ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இனங்கள் மற்றும் தனது காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் ஈடுபடுத்தி செல்வம் தருவார்.

இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும் ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுபகாரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக பாதிக்காது.

மகரம்

மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார்.

சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே  நன்மைகளைத் தரும்.

ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் தனது காரகத்துவங்களுக்கு உட்பட்ட சினிமா, தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், அவசியம் இல்லாத ஆடம்பர பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி  செல்வம் அளிப்பார்.

 துலாம் சரராசி என்பதாலும் சரராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகத்தைச் செய்யும் என்பதாலும் மாளவ்யயோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணைய கூடாது.

மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக்கூடாது. அவ்வாறு வலுப்பெற்றாலும் வேறுவகையில் கெட்டு சூட்சும வலுதான் பெற வேண்டும்

 இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனிபகவான் சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு சனி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது.

இந்த இடத்தில் திக்பலத்தை சுக்கிரன் இழந்து கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார். அவர் தனித்து இருக்கும் நிலையில் தோஷம் வலுப்பெறும். இது நன்மைகளைத் தராது. புதனுடன் இணைத்திருப்பது நல்ல யோகம்

பத்தாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய பெரிய வீடு, நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடுகொடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை, தாயார் வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார்.
கும்பம் :

கும்ப லக்னத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார்.

இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார்.

இந்த இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார் என்பதால் சிம்ம லக்னத்திற்கு நான் சொன்னது கும்பத்திற்கும் பொருந்தும்


இங்கிருக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் தனது காரகத்துவங்களான சினிமா, தொலைக்காட்சித் துறை, வீடியோ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை, வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி பணக்காரர் ஆக்குவார்.

 நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வீடு, நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார்.
இங்கு யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்ப லக்னத்திற்குப் பாவிகளான சூரிய சந்திர செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரத்தில் தான் அவர் இருக்க முடியும். எனவே யோகம் செய்யும் நிலையிலும் சில குறைகள் இருக்கும்.
 மேலும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காம இச்சையில் அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும் செய்வார்.
கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், வருமானத்தை பெண்கள் விஷயத்தில் செலவு செய்பவராகவும் இருப்பார்.

மீனத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார்.


ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார்.

அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் எட்டுக்குடையவனின் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் தனுசு லக்னத்திற்கு நான் சொன்னதைப்போலவே சுக்கிரன் இங்கு உச்சம் பெற்றால் அவர் தரும் யோகத்தை முறைப்படி அனுபவிக்க லக்னாதிபதி குருபகவானும் அதிவலு அடைந்திருக்க வேண்டும்.
 சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ள பெரும்பாலானவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.


இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள்.

தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத முடிவுகளை எடுப்பார்கள்.
இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும். எப்போதுமே இளமையில் வரும் சுக்கிரதசை இவர்களை திசை திருப்பி விடுகிறது.   மீனலக்னத்திற்கு சுக்கிரன் தனது சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் அல்லது தூர இடங்களில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக் குடிமகன் ஆக்குவார். வாழ்க்கைத்துணையை வெளிநாட்டில் காண வைப்பார்.

 விருந்துகள் கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு வாழ்க்கையும் தருவார்
களத்திரகாரகன் என்பதால் மாளவ்யயோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் மூலமாக சுக்கிரதிசையில் செய்வார்.


சுக்கிரனால் வரும் நோய்கள்

சுக்கிரன் பலம் குறைந்து ஜாதகத்தில் இருந்தால் கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படும். கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியத்தடை குறைகள் ஏற்படும்.

சுக்ரன் பரிகாரம்

சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். வெள்ளிக்கிழமை விரதம்  இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார், சுக்கிர பகவான். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத் தடைகளும் நீங்கும். கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்து, அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது கஞ்சனூர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கிழமை          - வெள்ளி
தேதிகள்         - 6, 15, 24
நட்சத்திரம்        -பரணி, பூரம், பூராடம்
ஆட்சி வீடு        -ரிஷபம், துலாம்
உச்சம்     -மீனம்
நீச்சம்            - கன்னி
ரத்தினம்     -வைரம்
உலோகம்        - வெள்ளி
தானியம்      -மொச்சை
நிறம்     -வெண்மை
ஆடை    - வெண்பட்டு
தசா காலம்      - 20 ஆண்டுகள்
கிரக அமைப்பு  -  பெண்
வாகனம்        - கருடன்
புஷ்பம்    -வெள்ளை தாமரை
சுவை     -இனிப்பு.


சுக்ரன் வரலாறு
நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது.

ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.

பித்ரு தோஷம் என்றால் என்ன?  பித்ரு தோஷம் நீங்க!

சிலந்தி வலை ரகசியம்!
சிலந்தி வலையை நீங்கள் பார்க்கும்போது வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருப்பதை பார்ப்பீர்கள்.  அதில் வட்டமாக இருக்கும் இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் போகின்ற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது இந்த ரகசியமம் தெரிகின்ற காரணத்தினால்  இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது அதில் நடக்காது . ஒரு வேளை அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேகமான ரோமங்களும் மிகவும் உதவி செய்கின்றன. பூச்சிகளைக் கட்டுப்படுத்த இநத் சிலந்திகள் உதவி செய்கின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிலந்தியைப்
பார்க்கும் போதே பலருக்குப் பயம் ஏற்படும். அவசரமாக விலகிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது. ‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன. ‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.

இது வலை ஏதும் பின்னுவதில்லை. மாறாக, சமையலறை ‘சிங்க்’ மற்றும் வீட்டுக் குப்பைகளில் மறைந்திருக்கிறது. இரவில் மட்டும் வெளிப்பட்டு கரப்பான்பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. சென்னை இந்தியா அறிவு அமைப்புகள் மையமானது நிறைய ‘பெரிய நண்டுச் சிலந்திகளை’ உருவாக்குகிறது. கரப்பான்பூச்சிகளை வேட்டையாடும் அளவுக்குப் பெரிதாகும் வரை அவற்றை வளர்க்கிறது. பின்னர், கரப்பான்பூச்சித் தொந்தரவு அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை விடுகிறது. ஒரு கட்டத்தில் இந்தச் சிலந்திகளின் எண்ணிக்கையே அளவுக்கதிமாக அதிகரித்து ஒரு தொந்தரவாகிவிடுமா? கிடையாது. இந்தச் சிலந்திகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலந்திகளை ஒரு பகுதியில் அதிகமாக விடும்போது அவை பெருகாமல் போய்விடுகின்றன.

சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.

உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்லுகிறார்கள் ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.
தாமத திருமணம் - ஜோதிடம்

பருந்துக்கு வேறு வாய் முளைக்கும் உங்களுக்கு தெரியுமா?


ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து
விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்

சினிமாவுக்கு பாடல் எழுதுவது எப்படி?

மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!


 குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள். உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம். காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. நீண்ட நாட்களுக்கு...

 நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.

குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
 மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.
சினிமா பாடல் எழுதுவது எப்படி?

இணையத்திலும் பணம் பறிபோகும்

இணையம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம். ஆபாசம், ஹேக்கிங், ஸ்பாம் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். சமீபத்தில் இந்தியாவில் இணையக் குற்றங்களை பற்றி இணையப் பாதுகாப்பு நிறுவனமான நார்டன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக 16,000 ரூபாயை இணையத் திருடர்களிடம் இழக்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ. 23,878 ஆக உள்ளது.


பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உள்பட கணக்கு விவரங்களைத் திருடுவது , பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.17 நாடுகளில் 17,125 நபர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 1,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

உலகிலேயே இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையம் தற்போது அழிவுப் பாதைக்குச் அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களில் 31 சதவீதம் நபர்கள் தங்களது கடவுச்சொல்லை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 8 எழுத்துகள், நம்பர், அடையாளங்களை 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையக் குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் குற்றங்களில் ஈடுபடுவதால் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுகிறோம். இந்த தகவல்கள் யாரோ ஒருவரால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனுடன் பணத்தையும் இழப்பதுதான் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

இணையத் திருடர்களை பற்றி புகார் அளிக்கவும் சிலர் தயங்குகிறார்கள். போதுமான விழிப்புணர்வு இணையப் பயன்பாட்டளர்களிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இந்த பிரச்சினையிலிருந்து எளிதாக விடுபடலாம்.


வியக்க வைக்கும் உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா?? 

மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் வாதம் – இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.

இம்மாணவர்களில் அநேகமானோர் முக நூல் (facebook) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித் தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முக நூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவைகளுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான “போர்னோ” (pornography – பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் — இலக்கியம்) கிடைக்கும் கருவியாகிவிட்டது.


செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகைசெய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. பெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேஜைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.


இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.
முதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச்சுவைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்சுவைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச்சுவைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு ‘நட்பாகும்’ பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.


சக வயது மாணவிகளைக் ‘காதலிக்கும்’ ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு ‘காதல்’ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப் பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.


ஆபாசப் பேச்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுக்காக வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

குறட்டை ஏன் வருகிறது? தெரியுமா உங்களுக்கு?

நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்


நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர் ஆவாரம்பூ குடிநீர் "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.." என்ற  மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது  உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி  நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க  வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

"ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி" என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை  கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம். கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும். இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும். சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது. இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால், சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக்
குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்
தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர்,
நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப் பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர்
போன்றவை அடங்கும்.